தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தம்மை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்
கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், தமது கட்சியின் வெற்றியை தடுப்பதற்காக அரசாங்கம் இந்தகைய இழிசெயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த, பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜயந்த விஜேசேகர கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட போது அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமக்கு உள்ள உயிர் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வித முன் அறிவித்தலுமின்றி அரசாங்கம் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த 21ம் திகதி முதல் ஜயந்த விஜேசேகரவிற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஊர்தியும் மீளக் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
Wednesday, 23 April 2008
புலிகளுக்கு தம்மை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிரதமரிடம் ஜயந்த விஜேசேகர முறைப்பாடு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment