எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எவ்வாறாயினும் அரசாங்கத்தை பெற்றிபெற செய்ய நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூர்த்தி உத்யோகஸ்தர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கின் உதயம் திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவென அம்பாறை மாவட்ட சமூர்த்தி உத்யோகஸ்தர்களை அழைத்து அம்பாறை நகர சபை மண்டபத்தில் நேற்று (22-04) பேச்சுக்களை நடத்திய தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்த அழுத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுறது.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெற்றாக வேண்டும் எனவும் இதற்காக சமூர்த்தி உத்யோகஸ்தர்கள் வீடு வீடாக சென்று பிரசாரங்களில் ஈடுபடவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இதற்கு தேவையான உதவிகளை அரசாங்கம் செய்து கொடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். உயிரிழந்தவர்கள், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் மற்றும் வாக்களிக்க செல்லாதவர்களிகள் வாக்காளர் அட்டைகளை சேகரித்து வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்பாறை, உகண, தெய்யத்தைகண்டிய, மஹாஓயா, தமண, லஹூகல, சம்மாந்துறை, அக்கரைப்பற்று உள்ளி;ட்ட பிரதேசங்களை சேர்ந்த 500 சமூர்த்தி உத்யோகஸ்தர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர். தேர்தலில் அரசாங்க வெற்றிக்காக முனைப்புகளை மேற்கொள்ளும் சமூர்த்தி அதிகாரிகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் சுசந்த புஞ்சிநிலமே குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, 23 April 2008
கிழக்கு தேர்தலில் வெற்றிபெற - அரசாங்கம் அழுத்தம்:
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment