சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் அனைத்துலக சுயாதீனக் குழு தனது பணிகளை இலங்கையில் நிறுத்தியுள்ள நிலையில் கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இறுதி ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
இந்த மாநாட்டை தலையேற்று நடத்திய அனைத்துலக சுயாதீனக் குழுவின் தலைவர் கே.என. பகவதி தெரிவிக்கையில்..
மனித உரிமை மீறல்கள் மற்றும் விசாரணைகளின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்டமா அதிபர் தலையீடுகள் இருந்தமையால் விசாரணைகளின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் தடையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் தேவையில்லை எனவும் பகவதி தெரிவித்துள்ளார். அனைத்துல சுயாதீன வல்லுநர் குழுவில் அனைத்லுலக ரீதியில் 11 பேர் உள்ளடங்கப்பட்டனர்.
இதுவரை 15 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் எங்களது பரிந்துரைகளை வழங்கியபோதும் அவைக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை எனவும் பகவதி சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment