Thursday, 24 April 2008

இந்தியா - இலங்கை இடையே கடலுக்கடியில் மின்சார கேபிள்

புதுடில்லி: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கடியில், மின்சார கேபிள் அமைக்கப்பட உள்ளது. பற்றாக்குறை ஏற்படும் நிலையில், கூடுதல் மின்சாரம் வைத்திருக்கும் நாடு, அதை சமாளிக்க உதவும்.

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும், கடலுக்கடியில் இன்டர்நெட் கேபிள் இணைப்பு அளிக்கப்பட்டு இருப்பது போல, இதுவும் கடலின் தரைப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது. மூவாயிரம் கோடி செலவில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்தொகையை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும்.

இத்திட்டத்தின் கீழ், ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு மின்சார கேபிள் இணைப்பு கொடுக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து மின்கம்பங்கள் மூலம் மதுரை தெற்கு கிரிட்டுடன் இணைக்கப்படும். இதே போல, இலங்கையில், தலைமன்னாரில் இருந்து அனுராதபுரம் கிரிட்டுக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும்.

மின் கேபிள் என்பதால், கப்பல் நங்கூரம், சுறா மீன்களால் இது சேதமடையும் நிலையில், மின்கசிவு இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. பிரதான மின் கேபிளுக்கு இணையாக, இன்னொரு பைபர் ஆப்டிக் கேபிளும் உடன் அமைக்கப்படுகிறது. இந்த கேபிள்கள் மூலம், இரு நாடுகளிலும் தொலைபேசி இணைப்புகளும் அதிகரிக்கப்படுகிறது.

No comments: