Thursday, 24 April 2008

சிலந்திப்பூச்சிகளின் படை எடுப்பால் ஆஸ்பத்திரி மூடப்பட்டது

ஆஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த சிலந்திப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை கடித்தால் கடித்த இடத்தில் வலியும் வேதனையும் இருக்கும். விஷம் உடலில் இறங்கினால் மயக்கம் ஏற்படலாம். உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம்.

இங்கு பாரலாபா என்ற இடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் நச்சுத்தன்மை கொண்ட சிலந்திப்பூச்சிகள் அதிக அளவில் காணப்பட்டன. இதனால் அந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டது. காலையில் தொடங்கி, 24 மணி நேரத்துக்கு ஆஸ்பத்திரி மூடப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். ஊழியர்கள் மருந்து அடித்து சிலந்திப்பூச்சிகளை அழித்த பிறகு ஆஸ்பத்திரி மீண்டும் திறக்கப்பட்டது.

No comments: