Friday, 18 April 2008

அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் வைகோ சந்திப்பு


நேற்று இரவு (ஏப்ரல் 17) 11 மணியளவில் இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார்.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற அமைதி சமாதான மாநாடு குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதங்கள் குறித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தவும், சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் ஆஸ்லோ மாநாட்டில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் நார்வே நாட்டின் சர்வதேச வளர்ச்சி அமைச்சர் எரிக் சோல்ஹைம் அவர்களுடான பேச்சுவார்த்தை குறித்தும் வைகோ பிரணாப் முகர்ஜியிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

அதுமட்டுமல்லாது நேற்று மாலையில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவின் நகலையும் அமைச்சரிடம் தந்தார்.

இலங்கை அரசின் இனக்கொலையால், இராணுவத் தாக்குதலால், தொடர்ந்து தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், புலிகளுடன் சமாதான பேச்சுவாத்தைக்கு முன்வர வேண்டும் என்றும், இந்திய அரசு வற்புறுத்த வேண்டுமெனவும், தான் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டதாகவும், அதற்குப் பிரதமர் இது முக்கியமானது என்பதால் வெளிவிவாகாரத்துறை அமைச்சரோடு இதுகுறித்து விவாதிக்கிறேன் என்று கூறியதை அமைச்சரிடம் வைகோ தெரிவித்தார். இலங்கைக்கு ஆயுதம் தரவில்லை என்றும், இராணுவத்தின் மூலம் தீர்வு ஏற்படுத்த முடியாது என்றும், இதனை இலங்கையிலேயே இருந்து வருகின்ற அதிபரானலும், அமைச்சரானாலும், யார் வந்தாலும் இதனை வற்புறுத்திச்சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் தன்னிடம் கூறியதாக பிரணாப் முகர்ஜிடம் வைகோ கூறினார்.

அதற்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை பிரச்சினையில் சிங்கள அரசின் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் கூடாது என்றும், நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம் என்றார்.

போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்று வைகோ கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வைகோ மீண்டும் சந்திக்க இருப்பதாகக் கூறினார்.

'தாயகம்' தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.

18.04.2007

No comments: