Wednesday, 16 April 2008

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டானைத் தொகுதி அமைப்பாளராக ஜெயராஜின் மனைவி

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவின் மறைவினால் ஏற்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டானை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவிக்கு அரவது துணைவியாரை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

கட்டானை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியை ஜெயராஜின் துணைவியாருக்கு வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களும், அமைச்சரின் நண்பர்களும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மறைவினால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவரது துணையார் முன்வர வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அமரர் ஜெயராஜின் அரசியல் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் இந்த அழைப்பை திருமதி ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிய வருகிறது.

திருமதி ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தற்போதும் பல சமூக சேவைகளை முன்னெடுப்பதாகவும், குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொதுகாப்பு உத்தியோகத்தரின் பிள்ளையின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயுடன் உயிரிழந்த அனைவரது வீடுகளுக்கும் சென்று அவர்களது உறவினர்களுடன் திருமதி ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே துக்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

ttpian said...

PLEASE APPOINT SUBRAMANIAN SWAMY;HE WILL BE THE WORST REPLACEMENT FOR JEYARAJ FERNANDO PULLE!