கொழும்பில் வெளியாகும் ஆங்கில வார இதழ் ஆசியரியருக்கு இராணுவப் பேச்சாளரால் அச்றுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
அண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பின் அனுசரணையுடன் தென்னிலங்கை பத்திரிகையாளர்கள் யாழ் குடாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் நோக்கம் இராணுவ ஆக்கிரமிப்பிற்குட்பட்ட யாழ் கடாநாட்டில் மக்கள் இயல்பு வாழ்கை வாழ்வதாக தென்னிலங்கைக்கும் சர்வதேசத்த்திற்கும் எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருந்தது.
எனினும் யாழ்குடாநாட்டு விஜயம் தொடர்பாக பொட்டம் லைன் என் வார இதழில் வெளியான கட்டுரை இராணுவத்தின் நோக்கத்தை நிறைவேற்ற தவறியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் விசனம் தெரிவித்துள்ளார்.
பொட்டம் லைன் செய்தியாளர் யாழ் குடாநாட்டில் மக்களின் இயல்பு வாழ்கை எவ்வாறு இராணுவ தலையீட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தனது கட்டுரையில் விபரித்திருந்தார்.
இதனால் ஆத்தரமடைந்த இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்ததுடன் எதிர் வரும் காலங்களில் இடம்பெறும் இவ்வாறான சுற்றுலாக்களில் குறிப்பிட்ட பத்திரிகையை சேர்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment