ஒரிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் ஏராளமான கடல் ஆமைகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் அந்த ஆமைகளை அம்மாவட்டத்தில் உள்ள கடலோரத்தில் ஒன்றாக கூட்டி வைத்து முட்டையிட செய்வது வழக்கம். அதுபோல், கடந்த மாதம் அனைத்து கடல் ஆமைகளையும் கடலோரத்தில் குவித்தார்கள். ஆனால் இன்றுவரை கடல் ஆமைகள் முட்டையிடவில்லை. இதுபற்றி ஆராய்ந்த வன,உயிரின நிபுணர்களும், கடல் ஆமை ஆராய்ச்சியாளர்களும் தங்கள் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 23-ந் தேதி ஒரிசா கடல் பகுதியில் அக்னி-1 ஏவுகணை சோதனை நடைபெற்றது. அப்போது எழுந்த சத்தத்தில் பயந்து போய்த்தான் ஆமைகள் முட்டையிட மறுப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அக்னி-1 ஏவுகணை, மீண்டும் இம்மாத இறுதியில் சோதித்து பார்க்கப்படுகிறது. ஆனால் ஆமைகள் முட்டையிட தயங்குவதால், ஏவுகணை சோதனையை தள்ளி வைக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (டி.ஆர்.டி.ஓ.) ஒரிசா அரசு கேட்டுக்கொண்டது. அதை டி.ஆர்.டி.ஓ.வும் ஏற்றுக் கொண்டுள்ளது.
Sunday, 13 April 2008
அக்னி ஏவுகணை சோதனையால் முட்டையிட மறுக்கும் கடல் ஆமைகள் அடுத்த சோதனை தள்ளிவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment