Sunday, 13 April 2008

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ஜார்ஜ் புஷ் எச்சரிக்கை

உலக வர்த்தக மைய கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற, மற்றொரு அதிபயங்கர தாக்குதலை அமெரிக்கா மீது நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக, அதிபர் ஜார்ஜ் புஷ் எச்சரித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் பிரம்மாண்டமான இரட்டை கட்டடங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் விமானம் மூலம் தகர்த்தனர். உலகையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்புகள், இதேபோன்ற ஒரு அதிபயங்கர தாக்குதலை மீண்டும் அமெரிக்கா மீது நடத்த, திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை கூறியுள்ள அவர், இதுபோன்ற தாக்குதல்களை சந்திக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஈராக்கில் இருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை தற்போது குறைக்க முடியாது என்றும் ஜார்ஜ் புஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

No comments: