Sunday, 13 April 2008

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை உடனே நிறுத்தக் கோரிக்கை--மீனவர் விடுதலை வேங்கை

கடலூர், ஏப். 12: இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் வாழ்வுரிமை கருத்தரங்கில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ தளவாடங்களையும் இதர உதவிகளையும் உடனே நிறுத்த வேண்டும்.

கடற்கரை மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மீன் பிடிக்கச் செல்லும் உள்நாட்டு மீனவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகளை வழங்க வேண்டும், கடலூரைச் சுற்றியுள்ள ஆறுகளில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீனவர் விடுதலை வேங்கை நிறுவனர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார். மீனவர் உயர்நிலை ஆலோசனைக் குழு தலைவர் பேராசிரியர் முத்து.குணசேகரன் சிறப்புரை ஆற்றினார்.

மாவட்டச் செயலாளர் பெருமாள் வரவேற்றார். மாநில இணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் பேசினர். ஆதிமூர்த்தி நன்றி கூறினார்.

உத்தமர் காந்தி விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் உத்தமர் காந்தி விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம், 2006-07-ம் ஆண்டு முதல் சிறந்த ஊராட்சிகளுக்கு "உத்தமர் காந்தி' விருது வழங்கப்படுகிறது.

ஊராட்சிகளில் சிறந்த பணிகள், வருவாயைப் பெருக்குதல், புதிய முயற்சிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுபெறும் ஊராட்சிக்கு நற்சான்றிதழ், கேடயம், ரூ. 5 லட்சம் வழங்கப்படும். ஊராட்சி மன்றத் தலைவருக்கு நற்சான்றிதழ், கேடயம், மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில் 2006-07-ம் ஆண்டுக்கான உத்தமர் காந்தி விருது குமராட்சி ஒன்றியம் மா.கொளக்குடி ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற, 2007-08-ம் ஆண்டுக்கான விருதுக்கு, 2002-03 முதல் 2006-07 ஆண்டுவரை உள்ள ஐந்தாண்டு காலத்தில், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் சிறப்பான நடவடிக்கைகள் விவரத்தை மாவட்ட ஆட்சியருக்கு 12-5-2008-க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்கள் கேட்டுப் பெறப்படும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, பரிசீலனை செய்து தகுதியான ஊராட்சிகளை அரசுக்கு பரிந்துரைக்கும். ஆர்வம் உள்ள ஊராட்சிகள் உரிய காலத்துக்குள் தகவல்களை அனுப்ப கோரப் படுகிறார்கள் என செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தொழிலாளர்கள் அனைவருக்கும்

வங்கிக் கணக்கு: ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 15-ம் தேதிக்குள் வங்கிக் கணக்கு தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, வாரம் தோறும் குறிப்பிட்ட நாளில் ரொக்கமாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய பட்டுவாடா தேதியில் தொழிலாளர்கள் ஊதியம் பெற முடியாத நிலை இருந்தால், ஊதியத் தொகை ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது ஊராட்சி உதவியாளர் பொறுப்பில் இருக்கும்.

இதைத் தவிர்க்கும் பொருட்டு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும், வங்கிக் கணக்கு தொடங்க அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. தொழிலாளர்களின் சொந்த கிராமத்தில் அல்லது அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் வங்கியில், கணக்கு தொடங்கப்படும். ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஊதியப் பட்டுவாடா தேதியில் ஊதியம் பெற முடியாத தொழிலாளர்களின் ஊதியம் மறுநாள் அவரது வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும். விவரம் தொழிலாளருக்கு தெரிவிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை உடனே நிறுத்தக் கோரிக்கை

ஊதியப் பட்டுவாடா தேதியில் ஊதியம் பெற முடியாத தொழிலாளர்களின் ஊதியம் மறுநாள் அவரது வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும். விவரம் தொழிலாளருக்கு தெரிவிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

No comments: