இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் ஈரானை உருத்தெரியாமல் அழிப்போம் என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
ஏ.பி.சி. தொலைக்காட்சியின் ' குட்மார்னிங் அமெரிக்கா ' என்ற நேர் காணலில் கலந்து கொண்ட ஹிலாரியிடம் , இஸ்ரேல் மீது ஈரான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் நீங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்வீரகள் என்ற கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஹிலாரி கிளிண்டன்," வெள்ளை மாளிகையில் தான் அதிபர் பொறுப்பில் இருக்கும்போது இஸ்ரேலை ஈரான் தாக்கினால், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்றார்.
மேலும் " அடுத்த 10 ஆண்டுகளில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்று ஈரான் முட்டாள்தனமாக நினைத்தால், ஈரானை உருத்தெரியாமல் நாம் அழிக்க நம்மால் முடியும் " என்று ஆவேசமாக கூறினார்.
Tuesday, 22 April 2008
ஈரானை உருத்தெரியாமல் அழிப்போம் : ஹிலாரி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment