ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் பிள்iளாயன் குழுவின் 15 வேட்பாளர்களும் அதிக விருப்பு வாக்குகளுடன் தெரிவார்கள் என கட்சியின் செயலாளர் தைலேஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமை வேட்பாளர் பிள்ளையான் முதலமைச்சர் ஆவது உறுதி என குறிப்பிட்டுள்ளார். பிள்ளையான் குழுவின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 வேட்பாளர்களும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தலா மூன்று வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றுக்கொண்டாலும் பிள்ளையானையே தமது கட்சி முதலமைச்சராக தெரிவு செய்யும் என கட்சியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும் முதலமைச்சர் பதவி குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மௌனம் சாதித்து வருகின்றது. முஸ்லீம்களின் வாக்குகளையும் சிங்கள கடும்போக்காளர்களின் வாக்குகளையும் பெற வேண்டிய நிலையில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் முதலமைச்சர் என மறைமுகமாக தெரிவித்து வருகின்றது.
எது எப்படி இருந்த போதும் முதலமைச்சர் யார் என்பதனை தேர்தலில் போட்டியிடும் கட்சியின் தலமைப் பீடமே தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டது. அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் முதலமைச்சர் யார் என்பதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தீர்மானிக்க முடியாது என்பது வெளிப்படை என தெரிவிக்கப்படுகிறது.
Sunday, 20 April 2008
கிழக்கு முதலமைச்சர் பதவி பிள்ளையானுக்கே..?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment