ஸ்ரீலங்கன் விமான நிலையத்தின் விமானிகள் பலர் ஒரே தடவையில் சுகயீன விடுமுறை எடுத்துக் கொண்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.
ஜனாதிபதி மற்றும் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமால் ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படாமையினால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ஸ்ரீலங்கன் விமான நிலையத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்ற போது விமானிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
எனினும், இதுவரையில் குறித்த எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்படவில்லை எனத் தெரியவருகிறது.
தற்போது ஸ்ரீலங்கன் விமான நிலையத்தில் நிலவும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக பல விமானிகள் வேறும் நிறுவனங்களில் பணிபுரியும் நோக்கில் தமது இராஜினாமா கடிதங்களை ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதனால், பங்களுர், சென்னை, புதுடெல்லி செல்லும் பல விமானப் பயணங்களை ரத்து செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
No comments:
Post a Comment