இலங்கைத் தமிழர்கள் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சட்ட விரோதமாகப் பயணம் செய்வதற்கு சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் முகவர்கள் கொழும்பு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள வலைப்பின்னல்களினூடாக உதவி வருகின்றனர் என டைம்ஸ் ஓப் இந்தியா நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
போலி கடவுட்சீட்டுக்கள் மற்றும் பயண ஆவணங்களைப் பயன்படுத்தி மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளினூடாக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இலங்கை தமிழர்கள் செல்வதற்கு இந்த முகவர்கள சட்டவிரோதமாக உதவியளித்து வருகின்றனர்
இத்தகைய 35 க்கும் மேற்பட்ட முகவர்கள் சென்னையில் சட்டவிரோத புலம்பெயர் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இதற்காக ஒரு நபரிடமிருந்து 15 இலட்சம் ரூபாவை அவர்கள் அறவிடுகின்றனர்.
பிரதானமாக கொழும்பில் போலியாகச் செய்யப்படும் ஆவணங்கள் சென்னையிலுள்ள முகவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. சாத்தியமாயின் அவர்கள் போலி ஆவணங்கள், கையடக்கத் தொலைபேசியின் அட்டைகள் மற்றும் பேங்கொக், கோலாலம்பூருக்கான விமானச் சீட்டுக்களையும் சென்னையிலுள்ள இலங்கையர்களுக்கு அவர்கள் கையளிக்கின்றனர் என அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Saturday, 19 April 2008
இலங்கைத் தமிழர்களை அமெரிக்காவூக்கும் கனடாவூக்கும் சட்ட விரோதமாக அனுப்பும் இந்திய முகவா;கள்!- டைம்ஸ் ஓப் இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment