இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில், பிரயோசனமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் உதவ முன்வரவேண்டும என் தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ செய்திதாளுக்கு அளித்த செவ்வியொன்றில், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த இந்தியா இரண்டு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்யவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
1989 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் வி பி சிங் அரசாங்கத்தின் சார்பில் கருணாநிதி தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் நோர்வேயில் இடம் பெற்ற சர்வதேச கருத்தரங்கில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான வைக்கோ கலந்து கொண்டார். இந்தயாவைச் சேர்ந்த வாழும் கலைப்பயிற்சி அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ றவிசங்கர் சுவாமிகளும் இந்த கருத்தரங்கின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார்.
இந்த கருத்தரங்கில் இலங்கையின் ஆளும் எதிர்கட்சிகளின் முக்கியஸ்த்தர்களும் பங்குபற்றி இருந்தனர். குறிப்பாக இந்தியாவின் ஆசியைப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானும் கலந்து கொண்டார்.
இந்தியாவின் அனுமதியுடனேயே இவர் கலந்து கொண்டிருப்பார் என நம்பப்படுகிறது. இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்த சிறீ சிறீ றவிசங்கர் சுவாமிகளும் இலங்கையின் சமாதான முயற்சிகளில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைக்கோ உடனடியாகவே டில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்த்தித்து நோர்வே மகாநாடு குறித்து விளக்கியிருக்கிறார்.
இந்த சந்திப்புக்கு எதிர்கட்சி வரிசையில் இருக்கும் வைக்கோவுக்கு உடனடியாகவே நேரம் வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் முன்னாள் இந்தியப் பிரதம் ரஜீவ்காந்தியின் கொலைவழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினி சிறீகரனை, ரஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வதேரா சிறையில் தனிமையாக சந்தித்துள்ளார்.
தாய் சோனியாகாந்தி, சகோதரன் ராகுல் காந்தி, மற்றும் இந்திய பாதுகாப்பு, வெளியுறவு உள்ளிட்ட அனைத்தையும் தீர்மானிக்கும் அதி உயர் மையத்தினர்;; என்போரின் விருப்பம் இன்றி இந்த சந்திப்பை மேற்கொண்டு இருக்க முடியாது எனக் கருதப்படுகிறது.
மறுபக்கம் நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதர் ஜோன் ஹன்சன் பௌவரும் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்கவேண்டும் இந்தியாவின் பங்கு மிக மிக இன்றி அமையாதது என அண்மையில் தெரிவித்திருந்தார்.
இத்தகைய பரபரப்பான சூழலிலேயே மத்திய அரசாங்கத்தின் பங்காளியாகவும், காங்கிரஸ் தலைமையுடன் மிகவும் நெருக்கமாக அனுசரித்துச் செல்லும் கட்சியாகவும் விளங்கும் தி.மு.க.வின் தலைவர் மு. கருநாநிதி இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவின் காத்திரமான பங்கு அவசியம் என வெளிப்படையாக வலியுறுத்தி உள்ளார்.
2005 ஆண்டு இறுதிப்பகுதியில் ஆட்சிப் பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்தியாவின் பிராந்திய வல்லாதிகத்திற்கு சவால்விடுகின்ற மாற்று சக்திகளுடன் சற்று அளவுக்கு அதிகமாகவே பிணைப்பை வலுப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக சினா, பாகிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள, இராணுவ மற்றும் பொருளாதார இணைப்புக்கள் இந்தியாவின் தூக்கத்தை கலைத்துள்ளமையை மறுக்க முடியாது.
இது 1978 களில் இந்திய நலனுக்கு புறம்பாக மேலைத்தேயத்துடன் கைகோர்த்து முன்னாள் இந்தியப் பிரதமரும் இந்தியாவின் இரும்பு மனுசி எனக் கருதப்பட்டவருமான இந்திராகாந்திக்கு சவால் விடுக்க முனைந்த ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் காலத்தை மீண்டும் கண்முன் கொண்டு வருகின்றது.
ஆயின் ஜே.ஆர் ஜெயவத்தனாவுக்கு இந்திரா காந்தி 1980களில் இருந்து புகட்டிய பாடத்தை, அதே பாணியை மஹிந்தவுக்கு சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் புகட்டப் போகிறதா?
Saturday, 19 April 2008
ஜே.ஆர் ஜெயவத்தனாவுக்கு இந்திரா காந்தி 1980களில் இருந்து புகட்டிய பாடத்தை, அதே பாணியை மஹிந்தவுக்கு சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் புகட்டப் போகிறதா
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
Thanks for this article.I wish that
two neighboring Countries' warm
relationship.SriLanka should always
listen to Indian advice.Only India could protect Srilanka all the time-
in times of need and hate as well.
Srilanka heading towards danger now.Repetition of previous action
again would halt wrong path.Srilanka could prosper then.
Post a Comment