Saturday, 19 April 2008

செல்வம் அடைக்கலநாதனின் மெய்ப்பாதுகாவலர்கள் கைது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளாகளாக கடமையாற்றிய இரண்டு தமிழர்களை ஆட்டுப்பட்டித்தெரு வீதி காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.


இவர்களுடன் மேலும் ஒரு தமிழரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செல்வம் அடைக்கலநாதனின் நெருங்கிய நண்பர் எனவும் கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த பிரபுக்கள் பாதுகாப்பு அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நண்பருக்கு பாதுகாப்பளிக்கச் சென்றிருந்ததாகத் தெரியவருகிறது.

குறித்த நண்பர் மூன்று லட்ச ரூபா பணத்துடன் கப் வண்டியில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு வழங்குவதைவிடுத்து அவரது நண்பருக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது குறிதும், பாராளுமன்ற உறுப்பினரின் நண்பர் பணத்தை எதற்காக எடுத்துச் சென்றார் என்பது பற்றியும் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments: