சண்டேலீடர் செய்திதாளின் ரத்மாலானை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள அச்சகத்தை எரித்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு என ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே வி பியில் இருந்து விமல் வீரவன்ச விலக்கிவிடப்பட்டதன் பின்னர்,கொழும்பில் ஊடக மாநாட்டை நடத்திய ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க,அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் இந்த செயலை செய்திருக்கமாட்டார்கள் என குறிப்பிட்டார். ஜே வி பியை சண்டெலீடர் பல தடவைகள் விமர்சித்தபோதும் ஜே வி பி இவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என சோமவன்ச தெரிவி;த்தார். இதேவேளை கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக விமல் வீரவன்சவை உரையாற்றக்கூறிய போதும் அவர் அதனை செய்யவில்லை எனக்கூறிய சோமவன்ச, பின்னர் அது தொடர்பான உரையை நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவே ஆற்றியதாக குறி;ப்பிட்டார்.
Sunday, 13 April 2008
ரத்மாலானை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள அச்சகத்தை எரித்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு --ஜே வி பி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment