கடற்படை இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. ஐரோப்பாவிலிருந்து வழமையாகக் கிடைக்கப்பெறும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை இம்முறை ரத்து செய்யப்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரியவருகிறது.
இலங்கையில் துரித கதியில் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் காரணமாகவே இம்முறை சலுகைகளை ஐரோப்பா ரத்து செய்ய உத்தேசித்துள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் இந்த ஜீ.எஸ்.பி. பிஸஸ் சலுகைகள் ரத்து செய்யப்படவுள்ளது.
எனவே படைத்தரப்பினருக்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நற்பெயரைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இருதின ஞாயிறு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எந்தக் காரணத்திற்காகவும் படைவீரர்கள் பலிக்கடாக்களாக்கப்பட மாட்டார்கள் என வலியுறுத்தி வந்த அரசாங்கத்தின் திடீர் மாற்றத்தை கண்டு பாதுகாப்பு தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
No comments:
Post a Comment