Friday, 25 April 2008

ஹிருவானொலி: பண்பலைகள் நாமல் ராஜபக்ஸவுக்கு:

ஏ.பி.சி. நிறுவனத்தின் ஹிரு வானொலிச் சேவைக்கு சொந்தமான அனைத்து பண்பலைகளையும் ‘தாருன்யட்ட ஹெடக்’ அமைப்பிற்கு வழங்க, லத்திரனியல் பரிமாற்று ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாருன்யட்ட ஹெடக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதியின் சிரேஸ்ட புதல்வர் நாமல் ராஜபக்ஸ கடமையாற்றுகின்றார். வர்த்தக நோக்கில் புதிய இலத்திரனியல் ஊடக வலையமைப்பை இந்த நிறுவனம் உருவாக்கவுள்ளது.

இலங்கை இலத்திரனியல் பரிமாற்று ஆணைக்குழு, தாருன்யட்ட ஹெடக் அமைப்பிற்கு ஊடக வலையமைப்பொன்றை உருவாக்க அனுமதி வழங்கியுள்ளது. யுத்தம் தொடர்பாக மக்களை பிழையான வழிக்கு இட்டுச் செல்லும் செய்தியொன்றை ஒலிபரப்பியது என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏ.பி.சீ. நிறுவனத்தின் 5 வானொலிச் சேவைகளின் ஒலிபரப்புக்கள் கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி இரவு இடைநிறுத்தப்பட்டது.

வானொலிச் சேவைகளின் ஒலிபரப்பு இடைநிறுத்தப்பட்ட போது 26 பண்பலை வரிசைகளை ஏ.பி.சி. நிறுவனம் கொண்டிருந்தது. அரசியல் ரீதியான ஆதரவையும், மற்றும் பண்பலைகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இடைநிறுத்தப்பட்ட ஏ.பி.சீ. வானொலிச் சேவையின் ஒலிபரப்பு நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் மூன்று வானொலிச் சேவைகளுக்கு மாத்திரமே ,ந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சூரியன் எப்.எம், ஹிரு எப்.எம் மற்றும் கோல்ட் எப்.எம். என்பவற்றுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது. ஏ.பி.சீ. நிறுவனத்திடம் காணப்பட்ட 26 பண்பலைகளில் 16 பண்பலைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டதுடன், மிகவும் பிரபலமடைந்திருந்த 107.9, 102.9, 100.7, 102.7 பண்பலைகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

ஏ.பி.சீ. நிறுவனத்தின் ஊடகத் தடையின் பின்னணியில் பல கோடிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும், அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: