சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகருக்கு மேலாக, திடீரென வானூர்தி ஒன்று பறந்ததைக் கண்ட பொதுமக்கள் பதற்றமடைந்து ஓடினர்.
கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள உயர் தொடர்மாடிக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த பணியாளர்கள் சிலர், வானூர்தி ஒன்று பறந்து செல்வதை அவதானித்தனர்.
அப்பகுதியில் வானூர்தி எதுவும் அந்நேரத்தில் பறப்பதில்லை என்பதால் பதற்றமடைந்த பணியாளர்கள், அப்பகுதி மக்களுக்கு அறிவித்ததால் அங்கு பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது.
பின்னர் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான வானூர்திதான் அது என்று தெரிவிக்கப்பட்டதும் அப்பகுதி மக்களின் பதற்றம் தணிந்தது.
No comments:
Post a Comment