Tuesday, 15 April 2008

இராக் குண்டு வெடிப்புகளில் எழுபதுக்கும் அதிகமானோர் பலி-(வீடியோ இணைப்பு)

இராக் தாக்குதலில் காயமடைந்த குழந்தை ஒன்று
இராக் தாக்குதலில் காயமடைந்த குழந்தை ஒன்று
இராக்கில் நடைபெற்ற மூன்று குண்டுத் தாக்குதல்களில் எழுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாக்தாதுக்கு வடக்கே இருக்கும் பகூபா நகரில் இருக்கும் நீதிமன்றத்திற்கு அருகே குண்டு ஒன்று வெடித்ததில் ஐம்பத்திமூன்று பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகருக்கு மேற்கே இருக்கும் ரமாடியில் காவல் துறையினர் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிற்றுண்டிச்சாலையில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாதில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், அல் கைதாவால் ஊக்கப்படுத்தப்பட்ட சுன்னி இஸ்லாமிய குழுக்கள் மீது சந்தேக நிழல் படிவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Bomb blasts raise al Qaeda fears


Apr. 15 - Two car bombs have killed more than 50 people in Sunni Arab areas of Iraq.

The attacks took place in regions which had been relatively quiet compared to the Shi-ite south where battles have been raging. It's thought al Qaeda could be behind the attacks because of the Sunni Arab militant group's history of using car bombs. One car bomb killed 40 people and wounded 80 outside a provincial government headquarters in Baquba.

Sonia Legg reports.


No comments: