புதுடில்லி: டில்லி டகிசர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம், ரூ. 52 ஆயிரம் ரொக்கப்பணம், இரண்டு மொபைல் போன்கள், தங்க நகைகளை போலீசார் ஒப்படைத்தனர். இவை திருடு போன பொருட்கள் அல்ல; பாலசுப்பிரமணியனின் கிரெடிட் கார்டை மோசடியாக பயன்படுத்தி வாங்கப்பட்டவை.
சில நாட்களுக்கு முன் டில்லி ஓட்டல் உத்சவில் உணவருந்த சென்றார் பாலசுப்பிரமணியம். உணவுக்கான தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினார். திரும்பவும் கிரெடிட் கார்டை பெற்றுக் கொள்ள மறந்து போனார். மறு நாள் கிரெடிட் கார்டை பயன்படுத்த தேடிய போது, அதை ஓட்டலில் விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்றார். ஆனால், பாலசுப்பிரமணியத்தின் கிரெடிட் கார்டு தங்களிடம் இல்லை என்று ஓட்டல் நிர்வாகம் கூறிவிட்டது. இதைத் தொடர்ந்து, கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தை அணுகி, தனது கார்டில் எந்த பரிமாற்றத்தையும் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மறுநாள் பாலசுப்பிரமணியத்தை தொடர்பு கொண்ட வங்கி அதிகாரிகள், ஒரே நாளில் ரூ.67 ஆயிரம் செலவிடப்பட்டு இருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து, போலீசில் புகார் செய்தார் பாலசுப்பிரமணியம். வங்கி அதிகாரிகள் உதவியுடன், கிரெடிட் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை சேகரித்தனர். ஏ.டி.எம்., மையத்தில் ரூ. 52 ஆயிரம் எடுக்கப்பட்டதும், மொபைல் போன் வாங்கப்பட்டதும், தங்க நகை வாங்கப்பட்டதும் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மொபைல் போன் கடையில், குறிப்பிட்ட தினத்தன்று, பாலசுப்பிரமணியத்தின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, குறிப்பிட்ட எண் கொண்ட மொபைல் போன் வாங்கியது தெரியவந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, ஒரு பெண் பேசினார்.
அவரிடம் விசாரித்த போது, தனது காதலன் வினோத் என்பவர் பரிசளித்ததாக தெரிவித்தார். வினோத்தை தேடிப்பிடித்தனர் போலீசார். அவரிடம் நடத்திய விசாரணையில் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டார். இதில், சசி சர்மா மற்றும் ஹரிஷ் சவான் என்ற மேலும் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களில் சசி சர்மா, ஓட்டல் உத்சவில் உணவு பரிமாறுபவராக வேலை பார்ப்பவர். அவர் எடுத்து வந்து கொடுத்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது.
அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம், மொபைல் போன்கள், தங்க நகைகளை பாலசுப்பிரமணியத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள், கோர்ட்டில் ஆஜர்
படுத்தப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.
Tuesday, 15 April 2008
மறந்து விட்டு வந்த கிரெடிட் கார்டு : ஒரே நாளில் ரூ.67 ஆயிரம் 'பணால்'
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
if the incident took place in Tamilnadu,Dhinamalar will say,LTTE has done that!
Post a Comment