Sunday, 20 April 2008

பிரியங்கா, நளினி சந்திப்புக்கு நான்தான் காரணம் - டி.ராஜேந்தர்

T.Rajendran
திருச்சி: பிரியங்கா, நளினி சந்திப்புக்கு நான்தான் மூல காரணம் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

திருச்சி வந்த ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி பிரச்சினை நாட்டை உலுக்கி வருகிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள எதிர்க்கட்சிகள் உறுதியாக குரல் கொடுக்காமல் இருப்பது வருத்தம் தருகிறது.

இடதுசாரிக் கட்சி எம்.பிக்கள் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்வதோடு நினறு விடுகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த விஷயத்தில் பெருத்த மெளனம் சாதிப்பது ஆச்சரியமகா உள்ளது.

விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதன் பின்விளைவுகள் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

விலைவாசி உயர்வைக் கண்டித்து லட்சிய திமுகதான் முதன் முதலில் குரல் கொடுத்தது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள்தான் முதலில் குரல் கொடுத்தோம்.

வேலூர் மத்திய சிறையில் பிரியங்கா, நளினி இடையே நடந்த சந்திப்புக்கு நான் தான் மூல காரணம். விரைவில் இலங்கை இனப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எனது கட்சி சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், தமிழக அரசு அதற்கு அனுமதி தராமல் மறுத்து வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் தங்கு தடையின்றி விற்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்காமல் அரசு அமைதியாக இருக்கிறது. அதேபோல பான்பராக் விற்பனையும் மாநிலம் முழுவதும் அமோகமாக விற்பனையாகி வருகிறது என்றார் ராஜேந்தர்.
நளினி விடுதலை ஆவாரா?

இந்த நிலையில் நளினியை விடுதலை செய்வது தொடர்பாக அவரது தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை உறுதி செய்யும் வகையில் நளினி தொடர்பான கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

ttpian said...

My,Mappaillai( i used to call him,during my college days) is always very constructive!
if Nalini is released,the entire crdit goes to my mappillai-TR