ஜே.வீ.பீயில் இருந்து பிரிந்து நிற்கும் விமல் வீரவன்ஸவின் அணியை சேர்ந்த சுஜாதா அழககோன், சோமவன்ஸ அணியினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சுஜாதா நாளை ( 11-04) விமல் வீரவன்ஸ அணிக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதா சோமவன்ஸ அணியினர் தெரிவித்துள்ளனர். நேற்று விமல் வீரவன்ஸ ஆதரவான ஊடகவியலாளர் மாநாட்டில் சுஜாதா கலந்துகொண்டார். இந்த நிலையில் சோமவன்;ஸ அணியினரின் வீட்டுக்காவலில் உள்ள சுஜாதா ரகசியமான இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும். தடுத்து வைக்கப்பட்டுள்ள சுஜாதா நாளைய தினம் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Thursday, 10 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment