ராகுல் காந்தியை தனது பிரதமர் அலுவலக அமைச்சராக்கி அவரை பிரதமர் பதவிக்கு தயார்படுத்த மன்மோகன் சிங் விரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஞாயிறன்று மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.இளம் தலைவர்கள் பலர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அந்த அமைச்சரவை மாற்றத்தின்போது காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரான ராகுல் காந்தியையும் அமைச்சராக்க தாம் விரும்பியதாகவும் , ஆனால் கட்சிப் பணியாற்ற வேண்டியதிருப்பதால் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் சோனியா காந்தியே கூறியிருந்தார்.
இந்நிலையில் , இது குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்கால பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் பெரும் தலைவர்களால் வர்ணிக்கப்படும் ராகுல் காந்தியை பிரதமர் அலுவலக அமைச்சராக்கி , அவருக்கு பிரதமர் பதவிக்குண்டான நிர்வாக சூட்சுமங்களை சொல்லிக் கொடுத்து அவரை அப்பதவிக்கு தயார்படுத்த விரும்பியுள்ளார் பிரதமர் மன்கோன் சிங்.
தமது இந்த விருப்பத்தை அவர் கட்சித் தலைவரும் , ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தியிடம் மன்மோகன் தெரிவித்துள்ளார்.அதற்கு சோனியாவும் ஒப்புதல் தெரிவித்துவிட்டு, அதுபற்றி ராகுலிடமும் கூறியுள்ளார்.
அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த ராகுல் , அமைச்சர் பதவியை இப்போது தாம் ஏற்றால் கட்சியின் இளைஞர் அணி பிரிவை பலப்படுத்தும் தமது பணி பாதிக்கப்படும் என்று கூறிவிட்டதாகவும் , அதே சமயம் அமைச்சரவையில் இளம் தலைவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவரது இந்த வலியுறுத்தலின்பேரிலேயே ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஜிதின் பிரஸாதா போன்றவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத காங்கிரஸ் மேலிடத் தலைவர் ஒருவர் கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, 8 April 2008
ராகுல் காந்திக்கு பயிற்சி அளிக்க விரும்பிய மன்மோகன்
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
இதில் என்ன பயிற்சி வேண்டியிருக்கின்றது? இது நேரு குடும்பத்தின் குடும்பத் தொழில்.
Post a Comment