மத்திய அரசின் அனுமதிபெற்று வருமாறு வலியுறுத்தல் சென்னை, "பிரபாகரன்' திரைப்படச் சுருளை அதன் இயக்குநர் துஷந பீரிஸிடம் கையளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை ஜெமினி திரைப்படக் கூடம், மத்திய அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்று வந்தால் மட்டுமே படச்சுருளை வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. இதனால், இயக்குனர்
துஷார பீரிஸ் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் துஷாரா பீரிஸ் பிரபாகரன் என்ற பெயரில் தமிழ் மற்றும் சிங்களத்தில் ஒரு படம் எடுத்துள்ளார். இதில் தமிழர்களையும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அவர் இழிவாகச் சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் படத்தை பிரிண்ட் போடுவதற்காக நெகட்டிவுடன் சென்னைக்கு வந்தார். ஜெமினி திரைப்படக்கூடத்தில் பிரிண்ட் போடும் பணி நடந்தது.
இதை அறிந்த திரையுலகினர் விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் அமைப்பினர் விரைந்து சென்று பிரிண்ட் போடும் பணியைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் பீரிஸ் தாக்குதலுக்கும் உள்ளானார்.
இப்படத்துக்குத் தடை கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் ""பிரபாகரனுக்கு'' இடைக்காலத் தடை விதித்தது. விளக்கம் அளிக்குமாறு பீரிஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
படச்சுருளை பெறறுத் தரக்கோரி இலங்கை அரசை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பீரிஸ் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பி வந்தார்.
நேராக ஜெமினி திரைக்கூடம் சென்று அவர் படச்சுருளை திரும்பத் தரும்படி கேட்டார். ஆனால் ஜெமினி திரைப்பட நிர்வாகிகள் படச் சுருளை தர மறுத்து விட்டனர். மத்திய அரசிடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே படச்சுருள் திரும்பத் தரப்படும் என அவர்கள் பீரிசிடம் திட்டவட்டமாக கூறிவிட்டனர். படச்சுருளை தரலாம் என இந்திய அரசு எழுத்துபூர்வமாக அனுமதி அளித்தால் மட்டுமே படச் சுருளைத் தர முடியும் என பீரிஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரபாகரன் படத்தின் சில காட்சிகள் யூடியூப் இணையத்தளத்தில் நடமாடுவதாக ஒரு தகவல்
Tuesday, 8 April 2008
""பிரபாகரன்'' திரைப்படச் சுருளினை இயக்குநரிடம் வழங்க ஜெமினி திரைப்படக் கூடம் மறுப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment