skip to main |
skip to sidebar
புதுடில்லி: பஜாஜ் தயாரித்துள்ள பைக்குகளை போல, சீன கம்பெனிகள் போலியாக பைக்குகளை தயாரித்து, மலிவு விலையில் விற்பது அதிகரித்து வருகிறது; இதனால், இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பஜாஜ் ஏற்றுமதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பைக்குகளை விற்கும் நிறுவனம் பஜாஜ். லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் கணிசமான அளவில் பைக்குகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் விற்பனை பாதிக்கும் வகையில், இந்த நிறுவன பிராண்டுகளை போலவே, போலி பைக்குகளை சீன நாட்டின் சில கம்பெனிகள் தயாரித்து விற்கின்றன. இந்தியாவில், இந்த போலி பைக்குகளை வேறு பெயர்களில் விற்பதுடன், வெளிநாடுகளிலும் பஜாஜ் ஏற்றுமதியை குலைக்கும் வகையில், இந்த போலிகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. இது தொடர்பாக, அந்தந்த நாட்டின் அமலாக்க பிரிவுகளில், பஜாஜ் நிறுவனம் புகார் செய்துள்ளது. ஆதாரத்துடன் தகவல்களை அளித்து, சீன கம்பெனிகளின் போலி பைக்குகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் பைக்குகள் விற்பனையில் 20 சதவீதம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு சீன கம்பெனிகளின் போலி தயாரிப்புகள் வேட்டு வைக்கின்றன. இலங்கை, மெக்சிகோ, ஈரான் உட்பட சில நாடு களில் சீன போலி பைக்குகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. பஜாஜ் நிறுவன பிராண்ட் பைக்குகளை அப்படியே அச்சுஅசலாக வார்த்தது போல, சீன கம்பெனிகள் போலி பைக்குகளை தயாரித்துள்ளன. பஜாஜ் நிறுவன பிராண்டு பெயர்களை சற்று மாற்றி, இந்த போலி பைக்குகளை 25 சதவீதம் விலை குறைத்து சீன கம்பெனிகள் விற்பதால் அவற்றுக்கு பல நாடுகளில் கிராக்கி உள்ளது.
1 comment:
bajaj india
bajaj china
bajaj srilanka
good combination! what about bajaj pakisthan?
Post a Comment