Wednesday, 23 April 2008

தசாவதசாரம் வீடியோ-ஆடியோ 'லீக்'!

Dasavatharam Video and audio
சென்னை: மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட தசாவதாரம் படத்தின் பாடல்கள் வீடியோ மற்றும் ஆடியோ சில இணைய தளங்களில் முன் கூட்டியே லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் பத்து வித்தியாசமான வேடங்களில் நடிக்க பல கோடிகள் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள பிரம்மாண்டமான படம் தசாவதாரம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட இப்படம் இப்போதுதான் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

பிரபல இந்தி இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை நாளை மறுதினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவில் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ ஜாக்கி சான் வெளியிடுகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப், மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

தமிழக முதல்வர் கருணாநிதி ஆடியோவைப் பெற்றுக் கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன.

இந் நிலையில் அதிரடியாக, தசாவதாரத்தின் அனைத்துப் பாடல்களையும் சில இணைய தளங்கள் லீக் செய்துவிட்டன. தசாவதாரம் ஆடியோ சிடி கவரின் படத்துடன் பாடல்கள் லீக் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இப்பாடல்களின் வீடியோ காட்சிகளையும் மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சில இணைய தளங்கள் வெளியிட்டுள்ளன.

தசாவதாரம் சிடியில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

அதன் விவரம்:

1.உலகநாயகன்... (கம் டான்ஸ் வித்மி)
பாடல்: வைரமுத்து, பாடியவர்: வினித்

2. கல்லை மட்டும் கண்டால்...
பாடல்: வாலி, பாடியவர்: ஹரிஹரன் மற்றும் குழு

3. முகுந்தா... முகுந்தா...
பாடல்: வாலி, பாடியவர்: கமல்ஹாசன், சாதனா சர்க்கம்

4. ஓ..ஓ... சனம்...
பாடல்: வைரமுத்து, பாடியவர்கள்: கமல்ஹாசன், மகாலட்சுமி ஐயர்

5. கா... கருப்பனுக்கும்....
பாடல்: வைரமுத்து, பாடியவர்: ஷாலினி சிங்

6. ஓ...ஓ... சனம் (ரீமிக்ஸ்)
பாடல்: வைரமுத்து, பாடியவர்: ஹிமேஷ் ரேஷம்மியா.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்தின் பாடல்களும், இதே பாணியில்தான், ஆடியோ வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்பே அனைத்து இணைய தளங்களிலும் வெளியானது நினைவிருக்கலாம்.

No comments: