வடபோர்முனை முகமாலையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கை அடுத்து விடுதலைப் புலிகள் நடத்திய ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் இரு ஆட்டிலறி ஏவுதளங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
கிளாலி சந்திக்கு அருகில் உள்ள ஆட்டிலறி ஏவுதளத்தில் நிலைப்படுத்திய ஒரு பற்றி (6 ஆட்டிலறிகள்) ஆட்டிலறிகள் மீது விடுதலைப் புலிகளின் எறிகணைக் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதன்போது ஆட்டிலறி எறிகணைக் களஞ்சியமும் தீப்பற்றி எரிந்துள்ளது. கிளாலி பகுதியில் நிலைப்படுத்திய 6 ஆட்டிலறிகளில் குறைந்தது 3 ஆட்டிலறிகள் கடும் சேதம் அடைந்திருக்கக்கூடும் என விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் எழுதுமட்டுவாள் ஆட்டிலறி ஏவுதளம் மீதும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இங்கும் ஆட்டிலறிகள் சேதமடைந்திருக்காலம் என நம்பப்படுகின்றது.
அத்துடன் எறிகணைக் களஞ்சியத்திற்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. எழுதுமட்டுவாளில் மோட்டார் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் தெரிவித்த போதும் அவை ஆட்டிலறி ஏவுதளங்கள் என பின்னர் கூறப்பட்டுள்ளது.
Tuesday, 22 April 2008
கிளாலி மற்றும் எழுதுமட்டுவாள் ஆட்டிலறி ஏவுதளங்கள் மீது புலிகள் துல்லியமான தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
appadi podu!
Post a Comment