அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சு பதவி விரைவில் பறிக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் அமைச்ர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் அண்மைக்காலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் இதனை அடுத்து அமைச்சு பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் மைத்திரிபால சிறீசேனவிற்கு எதிரான பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் அமைச்சர் மைத்திரிபால சிறீசேன பிரித்தானியாவிலும் பிரான்சிலும் பேச்சுவார்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment