Monday, 21 April 2008

கொழும்பில் முகத்துவாரத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நேற்று முன்தினம் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து கொட்டாஞ்சேனை காவல்துறையிடம் முறையிடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடியை பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதான தம்பிராஜா எனும் குடும்பஸ்தரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் புதுச் செட்டித் தெருவில் வைத்து வாகனத்தில் சென்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது மனைவி பிரதியமைச்சர் பெ ராதாகிருஷ்ணனிடமும் முறையிட்டுள்ளார்.

No comments: