Monday, 14 April 2008

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு - ஸ்ரீநாத் பெரோரா

ஸ்ரீலங்கா ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகிக்கும் ஒருவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் அரச படைகளின் செயல்பாடுகளயைம் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை ஐக்கிய சோசலிச கட்சியின் பிரதிநிதியான ஸ்ரீநாத் பெரோரா என்பவரே அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பதன் மூலமாவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் எனினும் அரசாங்கம் அதனை உணர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும்மோசமான மனித உரிமை மீறல்களிலர் ஸ்ரீலங்கா அரச படைகளே ஈடுபட்டு வருவதாகவும் அரசாங்கம் இதனை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் ஈஸ்ட்ஹாம் பகுதியில் பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளார் கட்சியின் ஏற்பாட்டில வரும் இலங்கையில் யுத்தத்தை நிறுத்துதல் என்ற தொனிப் பொருளில் இடம்பெற்று கருத்தரங்கில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே ஸ்ரீநாத் பெரோ இந்த கருத்தக்களை வெளியிட்டுள்ளார்.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ள அரசாங்க்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஸ்ரீலங்கா அரசாங்க உயர் மட்டத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.

2 comments:

Anonymous said...

All Tamils must be grateful to the British Socialist Labour Party for organising a meeting on the political problems of the Sri-Lankan Tamils that had received only step-motherly treatment from Western countries and bringing in a Sinhalese speaker with rational thinking-Srinath Perera. He being a member of the APPC is all the more importanat in bringing credibilty to his views.

When conscientious Sinhalese people like Mr SriNath Perera of the Sri-Lanka United Socialist Party speak out their mind with reasons the world is forced to take a second look at the Tamils issue that had been misrepresented by chauvinist Sri-lankan governments.
We request all fair minded people to voice their thinking. If not Sri-Lanka will be dangerous place to live as prophesied by Albert Einstein the intellectual giant gifted with forethought and vision. He said "The world is a dangerous place to live in;not because of the people who are evil, but because of the people who don't do anything about it".

His speach must be widely circulated including the EU and UN
Dr C P Thiagarajah

Anonymous said...

இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்ய அயராது உழைத்த திரு சேனன் அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்