Monday, 14 April 2008

குடியேற்ற விசா நடைமுறைகள் குறித்த விவகாரங்களை மறு ஆய்வு செய்யவுள்ளது ஆஸ்திரேலியா.

மெல்போர்ன்: குடியேற்ற விசா நடைமுறைகள் குறித்த விவகாரங்களை மறு ஆய்வு செய்யவுள்ளது ஆஸ்திரேலியா.

இது தொடர்பாக ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய தொழிலாளர் நல ஆணையர் பார்பரா டீகன் தலைமையில் கமிட்டியை அமைத்துள்ளது.

விசா பிரச்சினைகள், தொழிலாளர்களின் பிரச்சினைகள், ஆங்கில அறிவு தொடர்பான தேவைகள், ஊதிய விகிதம் உள்ளிட்டவை குறித்து பார்பரா தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்யும்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றப் பிரிவுத் துறை அமைச்சர் கிறிஸ் ஈவான்ஸ் கூறுகையில், தொழிலாளர், தொழிற்சாலை உறவு குறித்த துறையில், பார்பராவுக்கு நல்ல அனுபவம் உள்ளது. எனவே அவரால் இந்த குடியேற்றப் பிரச்சினைகள் குறித்து சுமூக தீர்வைப் பரிந்துரைக்க முடியும்.

விசா முறைகேடுகளைக் களைதல், விசா வழங்கும் நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்தும் பார்பரா ஆய்வு செய்வார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் அவர் ஆலோசனை மேற்கொள்வார் என்றார்.

பார்பரா கமிட்டியின் முக்கியப் பணியாக, 457 விசா பெற்றோர் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைப்பார்.

இதுதவிர வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு ஆங்கில அறிவு போதிய அளவுக்கு இருக்கிறதா என்பதையும் இந்தக் கமிட்டி ஆராயும்.

No comments: