இலங்கையின் மனித உரிமை நிலைவரம் காரணமாக, சர்வதேச கடன் ரத்துத் திட்டத்திலிருந்து இலங்கை நீங்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது.
உலகின் வறிய நாடுகள் சிலவற்றின் கடன்களை ரத்துச் செய்யும் தீர்மானம் ஒன்றுக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் விரைவில் அங்கீகாரம் அளிக்கவுள்ளது.
எனினும் இலங்கை, பூட்டான், லாவோஸ் ஆகிய நாடுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. மனித உரிமை மற்றும் நிதி முகாமைத்துவ விடயங்களை அடிப்படையாக வைத்தே இந்த நாடுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட மத, மனித உரிமை அமைப்புகள் பலவற்றை உள்ளடக்கிய "யூப்பிலி யு.எஸ்.ஏ' எனும் அமைப்பே இந்த கடன் ரத்துப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது.
மனித உரிமை மற்றும் நிதி முகாமைத்துவ விடயங்களில் குறிப்பிட்ட அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்தினை இலங்கை எட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
Friday, 18 April 2008
கடன் ரத்துத் திட்டத்திலிருந்து இலங்கை நீக்கப்படும் அபாயம்
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
this is official statement;
unofficial message:
Uncle Bush will give maximum thr.back door!
Post a Comment