Wednesday, 23 April 2008

தொண்டு பணியாளர்கள் கொலை: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு:-மாட்டபோகும் சிங்கள அரசு !!!!

மூதூரில் 17 தொண்டு பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அக்ஸன் எகேயின்ஸ்ட் ஹங்கர் அமைப்பு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிக மோசமான முறையில் கொலை செய்யப்பட்ட தமது அமைப்பின் இலங்கைப் பணியாளருக்கு நியாயம் வேண்டி இந்த வழக்கினை தொடுக்க உள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மூதூர் சம்பவம் தொடர்பாக இலங்கையின் சட்ட செயற்பாடுகள் குறித்து தமது அமைப்பு நம்பிக்கை இழந்துள்ளதாக அக்ஸன் எகேயின்ஸ்ட் ஹங்கர் அமைப்பின் ஊடக அதிகாரி லூசீலின் குரோஸ்ஜின் தெரிவித்து;ளளார். இந்த நிலையில் உண்மையை கண்டறியவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தாம் சர்வதேச விசாரணையை கோரியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் தமது அமைப்பு இலங்கையில் பணியில் ஈடுபட மாட்டாது எனவும் அவ்வாறு மீண்டும் இலங்கையில் பணியில் ஈடுபட நோர்ந்தால் அது மூதூர் படுகொலை சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணையில் கிடைக்கும் பிரதிபலனை பொறுத்தது எனவும் குரோஸ்ஜின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சுயாதீன அறங்கூறுகினர் குழு பணியில் இருந்தால் மாத்திரமே சர்வதேச தரத்தில் இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன என்பது, உறுதிப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்ற போது சம்பவத்துடன் இலங்கை படையினருக்கு தொடர்பு இருப்பதாக போர் நிறுத்த கண்காணிப்பு குழு, மனித உரிமைகளுக்கான, பல்கலைக்கழக ஆசிரியர் குழு முதலான அமைப்புக்கள் குற்றம்சுமத்தியிருந்தன. எனினும் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுதது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: