Wednesday, 9 April 2008

பாலியல் வன்முறை: சிங்கள ஊர்காவல் சிப்பாய் சரண்

சிறிலங்காவின் புத்தளம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைச் சுட்டுக்கொன்று விட்டு இளம் பெண் ஒருவரைக் கடத்திக்கொண்டு தலைமறைவான சிங்கள ஊர்காவல் படையைச் சேர்ந்தவர், அந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு காவல்துறையில் சரண் அடைந்திருக்கின்றார்

.
புத்தளம் சாலியயெல பகுதியில் உள்ள மகாகமவில் உள்ள வீட்டுக்குள் நேற்று முன்நாள் திங்கட்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் புகுந்த ஊர்காவல் படையைச் சேர்ந்தவர், அங்கிருந்த நால்வரை சுட்டுக்கொன்று விட்டு இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்றிருந்தார்.

இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட இளம் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அங்குள்ள வீதியில் வைத்து மீட்கப்பட்டார்.

ஊர்காவல்படையைச் சேர்ந்தவர் தன்னைக் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் என்று காவல்துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அங்குள்ள காவல் நிலையத்தில் சம்பவத்துடன் தொடர்படைய ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சரணடைந்துள்ளார். தன்னிடமிருந்த துப்பாக்கியையும் அவர் காவல்துறையினரிடம் கையளித்திருக்கின்றார்

No comments: