இளையவர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையை ரஜினிக்காக முன்பு தளர்த்திய ஷ்ரியா, அடுத்து சரத்குமாருக்காகவும் தனது கொள்கையை தியாகம் செய்துள்ளார். ராதிகாவின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைகிறார் ஷ்ரியா.
இளம் தலைமுறையினருடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையுடன் பல நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஷ்ரியாவும் ஒருவர். இந்த நிலையில் ரஜினியின் சிவாஜி பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தபோது தனது கொள்கையைத் தளர்த்தி சிவாஜியில் நடித்தார்.
இப்போது தனது கொள்கையை மீண்டும் தளர்த்தி சரத்குமாருடன் இணையவுள்ளார்.
ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஷ்ரியா. இதற்காக அவருக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ராடானுடன் இணைந்து இப்படத்தை தயாரிப்பது சன் டிவி என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளோம்.
இப்படத்தில் ஏற்கனவே சினேகாவும் புக் ஆகியுள்ளார். கதைப்படி ஷ்ரியாவின் தாய் வேடத்தில் நடிக்கவுள்ளார் ஸ்னேகா. அதாவது, சிறு வயது ஷ்ரியாவின் அம்மா வேடத்தில் வருகிறார் ஸ்னேகா.
அதாகப்பட்டது... பிளாஷ்பேக்கில் ஷ்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் வருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
அம்மா வேடம் என்றாலும் ஸ்னேகாவின் ரோலுக்கு முக்கியத்துவம் இருப்பதால்தான் நடிக்கவே ஒப்புக் கொண்டாராம் ஸ்னேகா. படத்தில் ஷ்ரியாவை விட ஸ்னேகாவுக்கு பாத்திர முக்கியத்துவமும் அதிகமாம்.
தற்போது சரத்குமார் 1977 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை முடித்து விட்டுப் புதிய படத்திற்கு வரவுள்ளார்.
அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு சரத்குமாருக்கு பெரிய ஹிட் படம் எதுவும் அமையவில்லை. எனவே 1977 மற்றும் புதிய படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.
Saturday, 12 April 2008
ஷ்ரியாவின் அம்மா ஸ்னேகா!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment