Saturday, 12 April 2008

சரக்கு விமானம் நொறுங்கி 8 பேர் பலி அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்து

மால்டோவா நாட்டின் சரக்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் சிசினாவ் விமான நிலையத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சுற்றுலா தலமான அன்டால்யா நகருக்கு புறப்பட்டது.

அந்த விமானம் கிளம்பிய உடனேயே அதை விமானி அவசர அவசரமாக தரையிறக்க முயன்றார். அப்போது அந்த விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் இருந்த விமானி உள்பட விமான ஊழியர்கள் 8 பேரும் பலியானார்கள்.

`ரஷியாவில் தயாரிக்கப்பட்ட இந்த சரக்கு விமானம் சூடான் நாட்டுக்குச் சொந்தமானதாகும். ஆனால் விமான ஊழியர்கள் அனைவரும் மால்டோவா நாட்டவர்கள்' என்று ரஷிய செய்தி ஸ்தாபனங்கள் தெரிவித்துள்ளன.

No comments: