Thursday, 24 April 2008

படைத்துறை சார் இணையத்தளங்களின் பார்வையில் வடபோர்முனையில் "அகற்றப்பட்ட" படையினர் எண்ணிக்கை-புதினம்.com

வடபோர்முனையில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட படையினர் எண்ணிக்கை 88 என்றும் 30 படையினர் காணாமல் போய் உள்ளனர் என்றும் படைத்துறை சார் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேற்று புதன்கிழமை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் 88 படையினர் கொல்லப்பட்டனர். 30 படையினர் காணாமல் போய் உள்ளனர். 376 படையினர் காயமடைந்துள்ளனர்.

முகமாலையில் நேற்று முன்னாள் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் அழிக்கப்பட்ட படை ஊர்தியானது சிறிலங்கா கவசப்படை கொமாண்டோக்களின் ரி-89 ரக பீரங்கி பொருத்திய கவசப்படை ஊர்தியாகும். இது சீனாவின் YW என்ற பெயரையுடைய சிறிலங்கா கவசப்படை கொமாண்டோக்களினது ஆகும். இதில் இருந்த படையினரில் 4 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் வெப்பநாடி ஆர்பிஜியால் அது தாக்கப்பட்டிருக்கலாம்.

இந்த ஊர்தி திருத்தக்கூடிய நிலையில் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு படைத்துறை சார் இணையத்தளம் 120 படையினர் கொல்லப்பட்டும் காணாமல் போய் உள்ளதாகவும் படையினரின் டாங்கிகள் 4 சேதமானதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் 370 படையினர் காயமடைந்தனர் எனவும்

அவர்களில் 250 படையினர் பி-1 ரக கடும் காயங்களுக்குட்பட்டுள்ளனர் எனவும்

ஏனையோர் பி-2 ரக காயங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

சிஎன்என் ஊடகத்துக்கு சிறிலங்காப் படைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 100-க்கும் அதிக படையினர் கொல்லப்பட்டனர். 400-க்கும் அதிக படையினர் காயமடைந்தனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காப் படைத்தரப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள படைத்தரப்பு விபரத்தில் 43 படையினர் கொல்லப்பட்டனர். 120 படையினர் காயமடைந்தனர். 33 படையினர் விபரம் இல்லை அல்லது காணாமல் போய் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைத்தரப்பு தகவல்களின் படி கொல்லப்பட்டும் காணாமல் போயும் 76 படையினர் இழக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

ttpian said...

Let Mahindha travel to EU countries and get 70,000 death boxes at concessional rate or at free of cost!
or approach china or pakisthan,they may send 70,000 with a condition to get some "BASE" at srilanka!