Wednesday, 7 May 2008

10 நிமிடங்கள் பறந்திருந்தால் வெடித்து சிதறியிருக்கும் - திஸ்ஸ அத்தநாயக்க தகவல்

மாகாண தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக மட்டக்களப்புக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் இன்னும் பத்து நிமிடங்கள் பறந்திருந்தால் வானிலேயே வெடித்து சிதறியிருக்கும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

விமானப்படை விமானி ஹெலிகொப்டரை எதுவித ஆபத்துமின்றி சாதூரியமாக தரையிறக்கியமையினால் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நானும் உயிருடன் இருக்கின்றோம் என்றும் அவர் சொன்னார். ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்;

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மட்டக்களப்பிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழவிருந்தது. விமானியின் சாதூரியத்தினால் நாம் இருவரும் உயிர்தப்பினோம் எனினும் கிழக்கு மாகாண தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகின்ற ஆயுதகுழுவின் தேர்தல் துண்டுபிரசுரங்கள் ஹெலிகொப்டர் மூலமாக கிழக்கு மாகாணமெங்கும் வீசப்படுகின்றது.

கிழக்கு மாகாண தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரசாங்க சொத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது துண்டுபிரசுரங்கள் ஹெலிகொப்டர் மூலமாக வீசப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

கிழக்கு மாகாண பிரசார நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலி மாலை 5.30 மணியளவில்

No comments: