இலங்கைக்கான ஆடைத்தொழிற்றுறைக்கான ஜீ.எஸ்.பி. கோட்டாவை இரத்து செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறவும் இல்லை. அதற்காக எமது அரசியலமைப்பை மாற்ற வேண்டுமென கோரப்படவுமில்லையென அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் பீரிஸ் இன்று வியாழக்கிழமை இதனைத் தெரிவித்தார். ஜீ.எஸ்.பீ. கோட்டா தொடர்பாக அக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு அறிவிக்கும். அதன் பின்பு எமது நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் டிசம்பர் 15ஆம் திகதியே மேற்கொள்ளப்படும்.
இந்த கோட்டாவுக்காக எமது அரசியலமைப்பை மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை. இரத்து செய்வதாக அறிவிக்கவும் இல்லை. அத்தோடு வெளிநாட்டு நீதிமன்ற உத்தரவுகளுக்கு நாம் அடிபணிய வேண்டிய அவசியம் கிடையாது அதற்கு தயாரில்லை. இது எமது அரசியலமைப்பை மீறும் செயலாகுமென்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்-
Thursday, 15 May 2008
எமது அரசியலமைப்பை மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை - ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment