Sunday, 11 May 2008

கொழும்பு புறக்கோட்டை பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற்ற முக்கியநபர் கைது

கொழும்பு புறக்கோட்டை பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் சுமார் 5 கோடி ரூபாவரை கப்பமாக பெற்று வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை மருதானை காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொட்ட நௌபர் பெயரில் இந்த கப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் மருதானை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நௌபரின் மனைவி என கூறி தனது மனைவியை இந்த சந்தேக நபர் கொட்டாஞ்சேனையில் உள்ள வர்த்தக ஒருவரிடம் 5லட்சம் ரூபா கப்ப பணத்தை பெற்று வரும் நோக்கி அனுப்பியுள்ளார்.

இதன் போது, குறித்த பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து கப்பம் பெற்றுவந்த முக்கிய நபரை கைதுசெய்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: