Friday, 16 May 2008

பிள்ளையான் முதலமைச்சரானால் சிறுவர்கள் படையில் இணைப்பதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு - ஐ.தே.க

ஆயுததரி பிள்ளையான் கிழக்கு மாகாண முலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால் அங்குள்ள பொது மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான தெரிவு செய்யப்படுவதன் ஊடாக அந்த ஆயுதக் குழுவினருக்கு அங்குள்ள சிறுவர்களை படையில் சேர்ப்பதற்கு அவர்களுக்கு கிடைக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபை தேர்தல் சுதந்திரமானதும் நீதியுமானதுமான தேர்தலாக இடம்பெறாமைக்கு பிரதான காரணம் பிள்ளையான் என நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: