Tuesday, 6 May 2008

அவசரகாலச்சட்டம் நீடிப்பு: கடந்த மாத யுத்த இழப்பு அறிவிப்பு:

59 பெருபான்மை வாக்குகளால் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்துடன் இணைந்து ஜே.வீ.பீ வாக்களித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. பிரேரணைக்கு எதிராக 17 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆதரவாக 76 வாக்குகளும் கிடைக்க பெற்றன.
இதேவேளை யுத்தம் காரணமாக கடந்த மாதத்தில் 176 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 90 பேர் காயமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் யுத்தம் காரணமாக கொல்லப்பட்ட படையினர் மற்றும் பொது மக்கள் தொடர்பான தகவல்களை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத்திற்கு நீடிக்கும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றிற அவர் கடந்த மாதத்தில் 120 படையினர் கொல்லப்பட்டதுடன் 945 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 56 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 145 பொது மக்கள் காயமடைந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் இவ்வாறான உயிரிழப்புகள் குறித்த கணக்கு வழக்குகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் நிலை முடிவுக்கு கொண்டு வரும் காலம் ஏற்பட்டுள்ளதாகவும் ரட்ணசிறி இதுவே தமது பிரார்த்தனை எனவும் விக்கிரமநாயக்க கூறியுள்ளார்.

No comments: