Thursday, 22 May 2008

ஐ நா மனித உரிமை குழுவில் இருந்து இலங்கையின் நீக்கமும் அதன் பின்புலக்காரணிகளும்.

ஐ நா மனித உரிமை குழுவில் இருந்து இலங்கையின் நீக்கமும் அதன் பின்புலக்காரணிகளும்.

21/5/2008 ஜெனீவா சிறப்பு கூட்டத்தொடரில் இரண்டாம் அமர்வில் ஐ நா மனித உரிமை குழுவின் உறுப்புரிமைக்காக போட்டியிட்ட இலங்கை தோல்விகண்டிருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் இங்கே இரு தோல்வியாளர்களை காணலாம். ஒன்று இலங்கை மற்றது இந்தியா.

முதலாம் அமர்வில் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட இந்தியா இரண்டாவது அமர்வில் பாகிஸ்தானை வெளியேற்ற முனைந்தது, யப்பான், தென் கொரியா, பகரேன்(?) ஆகிய நாடுகள் உண்மையிலே மனித உரிமை விடயத்தில் சிறந்து விளங்குகின்றன ஆகையால் போட்டி இலங்கை, பாகிஸ்தான், கிழக்கு திமோர் இடையே தான், நீதியின் பிரகாரம் அந்த ஆசனம் கிழக்கு திமோருக்கே. ஆயினினும் சன நாயகத்தில் முதற்பலி நீதியே. ஆகையல் நண்பர்கள் அற்ற திமொருக்கு இந்தியா நீதியின் வழி சென்று ஆதரவளித்தாலும் தோல்வி நிச்சயம், எனவே தான் இலங்கை மீது காதல் வந்தது இந்தியாவிற்கு. இலங்கையின் பச்சோந்தி தனத்தால் முசுலீம் நாடுளின் ஆதரவையும் பிச்சை வாங்கி ஆமாம் போட்டு சீன, பர்மிய ஆதரவையும், அமரிக்க எதிர் விமர்ச்னஙகளால் கூபா, வடகொரியா போன்ற பல நண்பர்களை வைத்திருக்கும் இலங்கையே பாகிஸ்தானை தோற்கடிக்க கூடிய தெரிவாகியது.

ஆனால் முசராப் ஐயா பொது தேர்தல் ஒன்றை நடத்தி தனக்கு எதிரான கட்சிகளையும் வெல்லவிட்டு பல மெற்கத்தேய நடுகளின் நண்பன் ஆகிவிட்டர், இதுவரை பாகிஸ்தானில் கோபம் கொண்டிருந்த மேற்குலகம் பாகிஸ்தானை பார்த்து கருணை கொண்டது. இதுவும் இலங்கையின் புதிய ஆசிய நண்பர் தேடும் முயர்ச்சியால் விசனம் அடைந்திருந்த மேற்க்குலகம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. கிழக்கு தேர்தலில் முசுலீமுகளை உதாசீன படுத்தியதால் ஈரான் பக்கமும் கொஞ்சம் கடுப்பு இருந்தது, இதற்கும் ஒரு படி மேலே போய் பாராளுமன்ற்த்தையும் இழுத்து மூடினார் மகிந்தர், இதை எல்லாம் கணக்கில் எடுக்காத இந்தியா இலங்கை என்ற நொண்டி குதிரையில் பந்தயம் கட்டியது, தோல்வியும் கண்டது.

11/9/2001 இலே மூழ்கி கிடக்கும் மேற்குலகம் தன்னையே நம்பவேண்டும் என்ற இறுமாப்பில் 1950 களில் இருந்து தொடரும் உறுப்புரிமை எனக்கே என்றிருந்த இலங்கையும் மண்கவ்வியது. நமக்கு விடிவே இல்லையா என்றிருந்த தமிழருக்கு விடிவெள்ளி தோன்றியது. பகிஸ்தானின் தந்திரமும் பலித்தது, சீனமும் தனக்குத்தானே சிரித்துக்கொண்டது. கிழக்கு திமோர், தமிழீழம் போன்ற உண்மை நண்பர்களை உதாசீனம் செய்த இந்தியா நொந்து என்ன பயன்?

ஆய்வு: கொலொம்பொ டமில்

No comments: