மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து ரயில் மூலம் கொழும்பு சென்ற போது வாதுவைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையைச் சேர்ந்த ஐந்து மாணவர்களையும் விடுதலை செய்யக் கோரியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் 300 க்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் பயிற்சிக் கல்லூரியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். `தமிழ் ஆசிரியர்கள் கொழும்பு செல்வதைத் தடைசெய்யாதே', `தமிழ் ஆசிரியர்களை துன்புறுத்தாதே', `அரசே கைது செய்த ஆசிரியர்களை விடுதலை செய்' என்பன போன்ற வாசகங்களுடன் இவர்கள் சுலோக அட்டைகளை ஏந்திச் சென்றனர். ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
Wednesday, 7 May 2008
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment