கிழக்கில் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் போது பல்வேறு ஊழல் மோசடிகளை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தேர்தல் வன்முறைகளுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமை வகித்ததாக கூறப்படுகிறது
அரசாங்கத்திடம் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்கள் எவரும் இவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை எனவும், பொலிஸ் திணைக்களத்திற்கே இதன் மூலம் களங்கம் ஏற்பட்டுள்ளதகாவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:குளோபல் தமிழ்செய்தி

No comments:
Post a Comment