Monday, 21 July 2008

வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 17 பேர் படுகாயம்

திங்கட்கிழமை, 21 யூலை 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள குஞ்சுக்குளம் பகுதி ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கபட்டுள்ளது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குஞ்சுக்குளம் பகுதி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்காப் படையினரின் பின்தளங்களில் இருந்து செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் கனரகசுடுகலன் தாக்குதல் சூட்டாதரவுகளுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதலை நடத்தினர்

முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் இன்று இரவு 11:00 மணிவரை நீடித்தது

படையினருக்கு விடுதலைப் புலிகளால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments: