வவுனியா, மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் மோதல்கள் மற்றும் தமிழீழ புலிகளின் எறிகணை வீச்சு ஆகியவற்றால் 17 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காத் தரப்பு தெரிவித்துள்ளது.
வவுனியா வடமேற்கு நவ்விப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதலில் எட்டு சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர்.
மன்னார் கட்டாடிவயல் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் படையினர் மூவர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் சிறிலங்காப் படைத்தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மன்னார் குருகாஞ்சிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மணலாறு ஜனகபுர வடக்குப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிரிபன்வேவ வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
துணுக்காய்ப் பகுதியில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடல் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment